புதுக்கோட்டை மாவட்ட மதிமுக ஒன்றிய நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுக்கோட்டையிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த மதிமுக நிர்வாகிகள்
புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுகவில் புதுக்கோட்டை ஒன்றியம் இதுவரை ஒருங்கிணைந்த ஒன்றியமாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது நிர்வாக வசதிக்காக வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் என்று இரண்டு ஒன்றிங்களாக பிரிக்கப்பட்டு, புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக வடவாளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.ஞான பிரகாசம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக மறவப்பட்டி கே.பாண்டியன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு இரண்டு ஒன்றிய பொறுப்பாளர்களும் மலர் மாலை அணிவித்தனர், பிறகு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து மதிமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் தங்கள் பொறுப்பை ஏற்று முதல் கையெழுத்திட்டு கட்சி பணியை தொடங்கினார்கள்.
மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ.ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மாத்தூர் எஸ்.கே.கலியமூர்த்தி முன்னிலை வைத்தனர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கா.சி.சிற்றரசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா ஆதிமூலம், நகர்மன்ற உறுப்பினர் அரசி.லதா கருணாநிதி, நகர் மன்ற உறுப்பினர் ரெ.காசிலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பொறியாளர் இரா.பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டு புதிய ஒன்றிய பொறுப்பாளர்களை வாழ்த்திப் பேசினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu