புதுக்கோட்டை அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்

புதுக்கோட்டை அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்
X

மாவட்ட விளையாட்டரங்கில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை . முத்துராஜா கொடியசைத்து போட்டிகளை தொடக்கி வைத்தார்

மாவட்ட விளையாட்டரங்கில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை . முத்துராஜா கொடியசைத்து போட்டிகளை தொடக்கி வைத்தார்

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் புதுக்கோட்டையிலுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா, கொடியசைத்து போட்டிகளை தொடக்கி வைத்தார்.

போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்க வளாகம் துவங்கி இரயில் நிலையம் ரவுண்டானா- மாலையீடு, திருமயம் சாலை -ஜெ ஜெ கல்லூரி சிவபுரம்- நமணசமுத்திரம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரைமூன்று பிரிவுகளில் நடைபெற்றது.

போட்டிகளில் 13 வயதிற்குபட்ட ஆண்கள் பிரிவில் - கிருபாகரன், தனசேகன், ஸ்ரீ ராம் நிதிஷ் 15 வயதிற்குபட்ட ஆண்கள் பிரிவில் - தினேஷ், சண்முகம், சுரேந்தர் .17 வயதிற்குபட்ட ஆண்கள் பிரிவில் - நிதிஷ் குமார், சபரி, சிங்காரவேலாருண்அய்யனார்.13 வயதிற்குபட்ட பெண்கள் பிரிவில் - தேஜாஸ்ரீ , நேகா,தனுஜா.

15 வயதிற்குபட்ட பெண்கள் பிரிவில் -அட்ரலின் ஜெனிடா, மஹாலெட்சுமி, வைஷ்ணவி.17 வயதிற்குபட்ட பெண்கள் பிரிவில் - கலைவர்ஷினி, செல்வ பிரிடா, ரக்ஷனா ஆகியோர்களும் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலாரூ.5000- இரண்டாம் பரிசு தலா ரூ.3000- மூன்றாம் பரிசு தலா ரூ. 2000- நான்கு முதல் பத்தாமிடம் வரை ரூ. 250- வழங்கப்பட்டது .

சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை மாவட்ட உடற்கல்வி ஆய்வர் ஆர்.தங்கராஜ், ஜோயல் பிரபாகர்; மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர், நேரு யுவகேந்திரா, மாவட்ட மிதிவண்டி சங்க செயலர் அசோக் மற்றும் மகேந்திரா, அசோக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார் செய்திருந்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!