புதுக்கோட்டையில் நவீன தொழில் நுட்ப முறையில் தரையிலிருந்து 4 அடிக்கு வீட்டை உயர்த்தும் பணி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் செந்தில்குமார். தொழிலதிபரான இவருக்கு புதுக்கோட்டை பெரியார் நகரில் இரண்டு மாடி கட்டிட வீடு ஒன்று உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 2,480 சதுரடியில் கட்டப்பட்ட இந்த வீட்டின் தரைத்தளம் தற்போது சாலை மீது சாலை போடப்பட்டதால் சாலை அமைந்துள்ள பகுதியை விட தாழ்வாக மாறி மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் புகும் சூழல் ஏற்பட்டது.
இதனால் மழைக்காலங்களில் சிரமத்திற்கு உள்ளான செந்தில்குமார், தனது வீட்டை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயர்த்த திட்டமிட்டு அதற்காக மதுரையைச் சேர்ந்த பில்டிங் லிப்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம் என்பவரை செந்தில்குமார் அணுகி உள்ளார்.
இதனையடுத்து தற்போது கடந்த 20 நாட்களாக அந்த வீட்டை அப்படியே 250 ஜாக்கி கொண்டு ஒவ்வொரு அடியாக மேலே உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.தற்போது வரை மூன்று அடி வீடு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பதினைந்திற்கும் மேற்பட்ட வெளி மாநிலத்து பணியாளர்கள் கட்டிட பொறியாளர்கள் ஆலோசனையோடு வீட்டை எந்தவித சேதமுமின்றி உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஆச்சரியத்தோடு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu