புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஆய்வு
புதுக்கோட்டையில் மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில், ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாநிலதிட்டக்குழுவினரின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில், ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், வேளாண்துறை, கல்வித்துறை, கால்நடை வளர்ப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய கந்தர்வக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல விடுதி கட்டுமானப் பணிகள் குறித்தும், புதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் சேய் நல வாகனத்தின் பயன்பாடு குறித்தும், துருசுப்பட்டி கிராமத்;தில் பயனாளிகளிடம் ஆடுகள், கோழிகள் வளர்ப்பு குறித்தும், நரங்கியன்பட்டு கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்களிடம் மின் திருகைப் பயன்பாடு குறித்தும் மாநில திட்டக் குழுத் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், மாவட்ட ஊராட்சி செயலர் லெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu