திருமயம் தொகுதியில் ரூ.1.40 கோடியில் திட்டப்பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் அம்மன்குறிச்சியில் புதியவகுப்பறை கட்டிடத்தைத்திறந்து வைத்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்றப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரிமளம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்றப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: தமிழக முதல்வர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி அரிமளம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள கிராமப்புற பொதுமக்களின் நலனுக்காக ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்றப் பணிகள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரிமளம் ஒன்றியத்தில், கீழப்பனையூர் ஊராட்சி, தெற்கு குடியிருப்பு பகுதியில் ரூ.4.64 இலட்சம் மதிப்பிலான 63முஏயுஃ11முஏ திறனுடைய புதிய மின்மாற்றியினை கொண்டு 7 விவசாயம் சார்;ந்த மின் இணைப்பிற்கும், 3 வீடுகளுக்கும் மற்றும் ரூ.4.76 இலட்சம் மதிப்பிலான 63முஏயுஃ11முஏ திறனுடைய புதிய மின்மாற்றியினை கொண்டு 5 விவசாயம் சார்;ந்த மின் இணைப்பிற்கும், 3 வீடுகளுக்கும், கைக்குளான்வயல் ஊராட்சி, கீ.புதுப்பட்டியில் ரூ.2.48 இலட்சம் மதிப்பிலான திறனுடைய புதிய மின்மாற்றியினை கொண்டு 1 விவசாயம் சார்ந்த மின் இணைப்பிற்கும்,
பிலிவயல் ஊராட்சி, வம்பரம்பட்டியில் ரூ.6.78 இலட்சம் மதிப்பிலான புதிய மின்மாற்றியினை கொண்டு 1 விவசாயம் சார்ந்த மின் இணைப்பிற்கும் மற்றும் ரூ.6.24 இலட்சம் மதிப்பிலான புதிய மின்மாற்றியினை கொண்டு 7 விவசாயம் சார்ந்த மின் இணைப்பிற்கும், மேல்நிலைவயல் ஊராட்சி, உசிலம்பட்டியில் ரூ.7.47 இலட்சம் மதிப்பிலான புதிய மின்மாற்றியினை கொண்டு 1 குடிநீர் மின் இணைப்பிற்கும், 150 வீடுகளுக்கும், விராச்சிலையில் ரூ.5.27 இலட்சம் மதிப்பிலான புதிய மின்மாற்றியினை கொண்டு 3 குடிநீர் மின் இணைப்பிற்கும், 150 வீடுகளுக்கும், 5 விவசாய பம்புகளுக்கும், இராங்கியம் ஊராட்சி, வளர்சிறுப்பட்டியில் ரூ.6.83 இலட்சம் மதிப்பிலான புதிய மின்மாற்றியினை கொண்டு 10 விவசாயம் சார்ந்த மின் இணைப்பிற்கும், 100 வீடுகளுக்கும், மின் இணைப்புகள் வழங்கக் கூடிய 8 புதிய மின்மாற்றிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரிமளம் ஒன்றியத்தில், பிலிவயல் ஊராட்சி, வம்பரம்பட்டியில் 15வது நிதிக்குழு மானியத்தின்கீழ் ரூ.9.98 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையினை திறந்து வைத்து, கல்லூர் ஊராட்சியில் பகுதிநேர கிராம நிருவாக அலுவலகம் பார்வையிடப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியத்தில், காரையூர் ஊராட்சி, சங்கரம்பட்டியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை, காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை, மேலத்தானியத்தில் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம், இடையாத்தூரில் ரூ.20.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம், மறவாமதுரை ஊராட்சி, கங்காணிப்பட்டி தொடக்கப் பள்ளியில் ரூ.17.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடம், அம்மன்குறிச்சி பள்ளியில் ரூ.15.47 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடம் என ஆகமொத்தம் இன்றையதினம் ரூ.139.65 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு அதிகப்படியான வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இதனை தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் மேகலாமுத்து (அரிமளம்), சுதா அடைக்கலமணி (பொன்னமராவதி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குமரன், செயற்பொறியாளர் (மின்வாரியம்) ஆனந்தாய், உதவி செயற்பொறியாளர்கள் (மின்வாரியம்) இராமநாதன், முத்துசாமி, ஊராட்சிமன்றத் தலைவர்கள் முருகேசன் (மேலத்தானியம்), பழனிவேல் (இடையாத்தூர்), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu