கூட்டுறவுத் தேர்தலை நடத்துவதில் தயக்கமில்லை:அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி: ஜனநாயகத்தைக் காப்பதில் திமுக அரசு என்றும் தயங்கிய தில்லை. கடந்த ஆட்சியில் தவணை முறையில் தேர்தலை நடத்தினார்கள். கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை, கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன, எல்லோரின் விருப்பப்படியே தேர்தல் நடத்தப்படும்.
வாக்காளர் பட்டியலை சரி செய்த பின் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தபடும், ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இன்னும் 170 சங்கங்களுக்கு ஜனவரி மாதம் வரையில் பதவிக் காலம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசு போதிய அளவில் மண்ணெண்ணெய் வழங்காததால் தான் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார் பெரியகருப்பன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu