நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: அமைச்சர்கள் தொடக்கம்
பைல் படம்
தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, இருதய நோய்கள் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சைகளை வழங்க தமிழக அரசின் மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, இருதய நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல் சார்ந்த பாதிப்புகளை தடுக்கும் விதமாகவும், அதன் மூலம் ஏற்படக்கூடிய இருதய பாதிப்புகள், பக்க விளைவுகளை குறைப்பதற்கும், ”நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக முதலமைச்சரால் 04.11.2023 அன்று தொடக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து 8 கி.மீ. நடைப்பயிற்சி சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டது.இதில் 500 -க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
”நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தினை மாவட்ட அளவில் தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு 8 கி.மீ. நடைப்பயிற்சி மேற்கொள்வதை ஊக்குவித்து நடைபயிற்சி ஒருங்கிணைப்பு மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவ முகாம்கள், சுகாதாரத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொது மக்கள், நடைபயிற்சி மேற்கொள்ளுவோர் நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் 3.12.2023 (ஞாயிறு) அன்று காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கிலி ருந்து தொடக்கப்பட உள்ள 8 கி.மீ. நடைப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu