புதுக்கோட்டையில் சிஐடியு-ஐஐபிஎச்எஸ் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி
புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக சிஐடியு - ஐஐபிஎச்எஸ் தீத்தடுப்பு மேலாண்மை கல்லூரி இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த எம்எல்ஏ- சின்னத்துரை
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்(சிஐடியு), ஐஐபிஎச்எஸ் பயர் சேஃப்டி கல்லூரி இணைந்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் போட்டியை நடத்தியது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கொடி அசைத்து துவக்கி வைத்தார். 500-க்கும் மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்தப் போட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்றது.
ஆண்களுக்கான பிரிவில் பாலமுருகன், சூர்யா, சத்தியமூர்த்தி வெள்ளைச்சாமி ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களை பெற்றனர். பெண்களுக்கான பிரிவில் சுஜித்தா, ஆர்த்தி, யுவராணி, சுபாஷினி முறையே முதல் நான்கு இடங்களை பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளை சேர்த்து மொத்தமாக 19 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், ஐஐபிஎச்எஸ் பயர் சேஃப்டி கல்லூரி தாளாளர் கணேச முருகானந்தம், இயக்குனர் சாந்தி முருகானந்தம், சிஐடியு மாநில செயலாளர் எஸ். ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், அரசு போக்குவரத்து ஊழியர சங்க மண்டல பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், தலைவர் கே.கார்த்திகேயன், பொருளாளர் தரணி முத்துக்குமார், துணை பொதுச்செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியை தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் புதுகை பாண்டியன் ஒருங்கிணைத்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu