சட்டத்துறை அமைச்சர் ரகுபதிபிறந்தநாள்: சிறப்பு பூஜை நடத்திய திமுகவினர்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிபிறந்தநாள்: சிறப்பு பூஜை நடத்திய திமுகவினர்
X

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடத்திய திமுகவினர்.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாபு, நகர பொருளாளர் அடைக்கலம், நகரத் துணைச் செயலாளர் மதியழகன், ஆறுமுகம், மணிகண்டன், சலீம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் தொகுதியான திருமயத்தில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் பல்வேறு இடங்களில் ரகுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


Tags

Next Story
why is ai important to the future