புதுக்கோட்டையில் ஜூன் 24 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டையில்  ஜூன் 24 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X
June 24 Private Sector Employment Camp at Pudukkottai

புதுக்கோட்டையில் மாவட்ட சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.06.2022 அன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்.கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும்; இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 24.06.2022 (வெள்ளிக் கிழமை) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எட்;டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்" www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business