கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்
X

 புதுக்கோட்டையில் (ஜாக்டோ-ஜியோ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்

ஆசிரியர், அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்

தமிழ்நாடு ஆசிரியர் - அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (ஜாக்டோ-ஜியோ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். தூத்துக்குடியில் ஆசிரியர்களைத் தாக்கிய சமூக விரோதிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்யும் உரிமையை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலிப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமைய நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ரெங்கசாமி, த.ஜீவன்ராஜ், வி.எம்.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகநாதன், ஆ.மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சா.ஹேமலதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்

Tags

Next Story
அல்சர் A to Z...அறிகுறிகள் முதல் தடுப்பு வழிகள் வரை..!உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..