சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு: கிராம விவசாயிகளுக்கு பயிற்சி

” கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி” புதுக்கோட்டை வட்டார குப்புடையான்பட்டி கிராமத்தில் நடைபெற்றது
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 முக்கியத்துவம் குறித்து கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி
புதுக்கோட்டைமாவட்டஉழவர் பயிற்சி நிலையம் மூலமாக 2022-23 ஆம்ஆண்டிற்கான " கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி" புதுக்கோட்டை வட்டார குப்புடையான்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இந்தபயிற்சியில் வேளாண்மை மற்றும் சகோதர துறையான விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையின் உதவிஇயக்குநர் ஆர்.ஜெகதீஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
விதைச்சான்று மற்றும்அங்கக சான்றுதுறைஉதவி இயக்குநர் அவர்கள்ப யிற்சியினை துவக்கி வைத்து சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 குறித்தும், சிறுதானியத்தின் முக்கியத்துவம், சாகுபடிதொழில் நுட்பங்கள், மதிப்புக் கூட்டுதல் பற்றியும், விதைப் பண்ணை அமைப்பது, தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார் .
புதுக்கோட்டை வட்டார வேளாண்மை அலுவலர் த.ஸ்வர்னா பேசுகையில், மாநில அரசின் முக்கிய திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கியத் துவம், தென்னை மரக்கன்று வழங்குதல், உயிர் உரங்களின் பயன்பாடு, நுண்ணூட்ட சத்துகளின் முக்கியத்துவம், நெல் தரிசில் பயறு சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள், நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துகூறினார்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ந.சண்முகி, உழவன் செயலியிலின் முக்கியத்துவம் பற்றியும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களில் பயன் பெற உழவன் செயலில் விவசாயிகள் முன்பதிவு செய்வது, பயிர்காப்பீடு, சந்தை நிலவரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை விடுதல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் எதிர்வரும் 2023-24ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கை தயாரிப்பதற்கு விவசாயிகள் தங்கள் கருத்துகளை உழவன் செயலியில் வேளாண்நிதிநிலை என்னும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம் என்பது உட்பட அனைத்து சேவைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை அட்மா திட்டஉதவிதொழில் நுட்ப மேலாளர் அருளரசு மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர் பா.விஜய் செய்திருந்தார்கள். பயிற்சியின் முடிவில் வேளாண்மை அலுவலர்(உழவர்பயிற்சிநிலையம்) செல்வி. ந.சண்முகி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu