புதுக்கோட்டை யில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு விழா

இந்நிறுவனத்தில் விரைவில் “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி” என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
புதுக்கோட்டை யில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு விழா
X

புதுக்கோட்டையில் திறக்கப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன புதிய அலுவலகம்

புதுக்கோட்டை யில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை யில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்சி நிறுவனம் திறப்பு விழா எஸ்.எஸ் நகரில் நடைபெற்றது. நிகழ்வுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார்.

முன்னோடி விவசாயி ச.வே.காமராசு முன்னிலை வகித்தார் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் எம்.பெரியசாமி, இந்திய விவசாய சங்கத்தின் பொது செயலாளர் மற்றும் முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி ஆகியோர் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

வேளாண்மை இணை இயக்குநர் தனது சிறப்புரையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளுக்காகவும், கிராமபுற மக்களுக்காகவும் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செய்ல்படுத்தி வருகின்றது. புதுக்கோட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளுக்கு வேளாண்மைத்துறை தேவையான ஒத்துழைப்பை நல்கும் என்றார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தனது தலைமையுரையில் எம்.எஸ்சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் விரிவடைந்துள்ளது. விரைவில் “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி” என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. எனவே புதிய திட்டங்களுக்கு வசதியாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பிளாட் எண் 44, எஸ்.எஸ் நகரில் செயல்படும். அனைத்து தரப்பினரும் எப்பொழுதும் போல் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

நிகழ்வில், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எம்.முத்துகுமார், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், கவிஞர்.நா.முத்துநிலவன், ஆசிரியர் மனசு பெட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார், அரிமளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மேகலா,

அறிவியல் இயக்க முன்னோடி லெ.பிரபாகரன், வேளாண்மை அலுவலர் சி.முகமது ரபீக், குழந்தைகள் நலக்குழத்தலைவர் க. சதாசிவம், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கே.ஜோயல்பிராபகரன், பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன், கவிஞர்.மு.கீதா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்கள்.

நிகழ்வில் விவசாயிகள், ஊராட்சி பிரதிநிதிகள், அறிவியல் இயக்க பிரதிநிதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆசிரியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் ஆர்.வினோத்கண்ணா நன்றி கூறினார்.

Updated On: 20 Nov 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஒரே பாலின திருமணத்தை முறைப்படி பதிவு செய்து வரலாறு படைத்த நேபாளம்
  2. ஆன்மீகம்
    Palli Palan in Tamil-உங்களுக்கு பல்லி எங்கே விழுந்தது? பலன்...
  3. டாக்டர் சார்
    Loose Motion Meaning in Tamil-வயிற்றுப்போக்கு வந்தால்..என்ன
  4. கடையநல்லூர்
    அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது..!
  5. உலகம்
    அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் 100...
  6. தேனி
    சினிமா வசனங்களாக மாறிய ரஜினி, கமல் பட டைட்டில்கள்: விசுவின் கைவண்ணம்
  7. தேனி
    தேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறை..!
  8. கடையநல்லூர்
    ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கார்மீது மோதி விபத்து..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் நாளை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின்...