வீடுகட்டும் திட்டம்: லஞ்சம் கேட்கும் அலுவலர் மீது புகார் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

வீடுகட்டும் திட்டம்: லஞ்சம் கேட்கும் அலுவலர் மீது புகார் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
X
இலவச வீடு கட்டும் திட்டங்களின்கீழ் பயனாளிகள் அரசு வழிகாட்டு நெறிமுறை களின்படி தேர்வு செய்து வேலை உத்தரவு வழங்கப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு கட்டும் திட்ட செயலாக் கத்திற்கு பொறுப்பாக உள்ள அலுவலர்கள் எவரேனும், வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கோ, பட்டியல் தொகை விடுவிப்பதற்கோ, கையூட்டாக பணம், பொருள் ஏதேனும் கோரினால் புகார் தெரிவிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் இதர இலவச வீடு கட்டும் திட்டங்களின்கீழ் பயனாளிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கப்படுகிறது.

இத்திட்ட செயலாக்கத்திற்கு பொறுப்பாக உள்ள சில அலுவலர்கள் வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளி களிடம் பல்வேறு காரணங்களுக்கு கையூட்டு பெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, வீடு கட்டும் திட்ட செயலாக்கத்திற்கு பொறுப்பாக உள்ள அலுவலர்கள் எவரேனும், வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கோ, பட்டியல் தொகை விடுவிப்பதற்கோ, கையூட்டாக பணம்,பொருள் ஏதேனும் கோரினால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தொலைபேசி எண் 04322 223766 -ஐ தொடர்பு கொண்டோ அல்லது நேரில் எழுத்து மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!