வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
X
women can apply for the Kalpana Chawla Award

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.

2022 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீரதீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன் வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும்.மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படவுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஐவர்ஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையாரோடு, பெரியமேடு, சென்னை -600 003 எனும் முகவரிக்கு தபால் மூலமாக எதிர்வரும் 26.06.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் https://awards.tn.gov.in என்ற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04322 222187 அன்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்படி விருது பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீர, தீர செயல் புரிந்த பெண்கள் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!