செப்.22 -ல் முன்னாள் படைவீரர்களுக்கான குறை கேட்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2022 அன்று நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2022 அன்று நண்பகல் 12.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர் அவர்களின் குறைகள் குறித்த மனுக்களை அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக வழங்கலாம். மனு அளித்திட விரும்பும் முன்னாள் படைவீரர், விதவையர் அவர்களது கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப் பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்குதல் வேண்டும்.
மேலும் மனு அளிக்க விரும்பும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu