குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசு வழங்கல்

குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசு வழங்கல்
X

குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய தீபாவளிப் பரிசு ஆடைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூகப் பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய தீபாவளிப் பரிசு ஆடைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள 27 குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய தீபாவளிப் பரிசு, புத்தாடைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளிப் பண்டிகையை குழந்தைகள் பாதுகாப்பாக கொண்டாடவும் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கவிதா ராமு, தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அசைக்க முடியாத அடையாளம்..!திருச்செங்கோட்டில் 60-அடி திமுக கொடிக்கம்பம்..!