தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு

தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டுமென கூட்டுறவு வங்கி ஊழியர் மாநாட்டில்முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி வலியுறுத்தினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு
X

எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி.

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவையை வாழ்த்தி அவர் பேசியதாவது:

சாதி, மதம் மற்றும் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி கூட்டுறவு சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செயல்படுவோம் என இந்தப் பேரவை அறிக்கையில் அறிக்கையில் எழுதி வைத்துள்ளீர்கள். இது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பர்துகாக்கிற முக்கியமான அம்சம் ஆகும்.

தமிழ்நாடு வங்கி’ உருவாக்கப்பட வேண்டும் என இங்கு தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய மிக முக்கியமான தீர்மானமாகும். இந்தியாவிலேயே மாநில கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரள அரசு ‘கேரள வங்கி’யை உருவாக்கி உள்ளது. அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அந்த அரசு அமல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டுகளையும் அந்த வங்கி ஈர்த்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை இணைந்து தமிழ்நாடு வங்கியை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். தமிழ்நாடு அரசு இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

பேரவைக்கு மாவட்டத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.ஜெயபாலன், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் டி.திருப்பதி, பொருளாளர் ஆர்.கருப்பையா ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி பல்வேறு மாவட்டப் பி.சந்திரகுமார், பி.அர்சத் அப்துல்லா, எம்.ராஜகேசி, டி.சுப்பிரமணியன், டி.ரகுமான், கே.கோவிந்தராசு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

மாநாட்டை நிறைவு செய்து மாநிலத் தலைவர் தி.தமிழரசு சிறப்புரையாற்றினார். முன்னதாக எம்.கோவிந்தராசு வரவேற்க, எம்.முரளிதரன் நன்றி கூறினார்.

Updated On: 28 Sep 2023 2:00 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  Polimer Tv Serials in Tamil-பாலிமர் தொலைக்காட்சி தமிழ் சீரியல்..!
 2. டாக்டர் சார்
  Thrombosis Meaning in Tamil-த்ரோம்போசிஸ் என்றால் என்ன? பார்க்கலாம்...
 3. திருவண்ணாமலை
  மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது திருவண்ணாமலை மகா தீப கொப்பரை
 4. இந்தியா
  சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு
 5. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர்
 6. நத்தம்
  நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
 7. சினிமா
  எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தியின் சம்பளம் எவ்ளோ...
 8. திருவள்ளூர்
  கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
 9. திருவள்ளூர்
  குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
 10. திருவள்ளூர்
  வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...