/* */

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

மலை போல் குவிந்து கிடந்த பூக்களுக்கிடையே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

HIGHLIGHTS

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
X

பக்தர்களின் காணிக்கை மலர்களால் சூழப்பட்ட நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன்

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் மலைபோல் பூக்கள் குவிந்தன. புதுக்கோட்டை அன்னவாசல்: பூக்களை சாற்றி வழிபாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி கோவிலுக்கு புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், திருவரங்குளம் மேட்டுப்பட்டி கேட் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பூக்களை கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன. இதில் மூலஸ்தானம் கருவறை முழுவதும் பூக்களால் நிரம்பி, அதற்கு அடுத்த அறையும் நிரம்பி, பக்தர்கள் வழிபடும் இடம் அருகே வரை பூக்கள் குவிந்தன.

இந்த நிலையில் அம்மனுக்கு பூக்கள் அனைத்தும் சாற்றப்பட்ட பின் திங்கள்கிழமை காலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதில் மலை போல் குவிந்து கிடந்த பூக்களுக்கிடையே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனின் திருமுகம் மட்டுமே தெரிந்தது. அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்து, மனமுருகி வேண்டினர். அம்மனுக்கு சாற்றப்பட்ட பூக்களை பக்தர்களுக்கு கோவில் குருக்கள் வினியோகித்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் பங்குனித்திருவிழா வருகிற 2- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது மாதம் 10-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது

Updated On: 28 March 2023 2:00 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
 2. தொழில்நுட்பம்
  செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
 3. திருவள்ளூர்
  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
 4. கோவை மாநகர்
  தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
 5. வீடியோ
  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
 6. லைஃப்ஸ்டைல்
  'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
 7. வீடியோ
  தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
 8. லைஃப்ஸ்டைல்
  மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
 9. உலகம்
  குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு