புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு: மாவட்ட ஆட்சியர் திறப்பு

புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு: மாவட்ட ஆட்சியர்  திறப்பு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு திறந்து வைத்தார்.

Electronic voting machine warehouse opens at Pudukkottai

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு (14.06.2022) திறந்து வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றினை பாதுகாப்பான முறையில் வைத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை, அலுவலர்களுக்கான அறை, சோதனை அறை, சாய்வுதளம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி இறக்குவதற்கான இடம், கழிவறை மற்றும் பாதுகாப்பு அறைகளுடன் 755 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் தீயணைக்கும் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் அமையப் பெற்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா(புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ (அறந்தாங்கி), குழந்தைசாமி(இலுப்பூர்), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பி.சிந்தனைசெல்வி, உதவிப்பொறியாளர் பாஸ்கர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business