சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி  மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மின்சார சட்டத்திருத்த மசோதா 2022 -ஐ திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, திட்டச் செயலாளர் கு.நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் திட்டப் பொருளாளர் ஆர்.ஆறுமுகம் நன்றி கூறினார்.

கோரிக்கைகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். 56 ஆயிரம் காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-ஐ திரும்பப்பெற வேண்டும். தரமான தளாவடப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். மின்துறையை தொடர்ந்து பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும். அடையாளங்காணப்பட்ட பகுதிநேரப் பணியாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும். அவுட் சோர்சிங் விடப்பட்ட துணைமின் நிலைய உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!