நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்புச் செயலர் ஹர்.சகாய் மீனா தலைமையில் நடந்த நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்

நீடித்தவளர்ச்சி இலக்குகள் குறித்து மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் அரசுச் செயலர் ஹர்.சகாய்மீனா தலைமையில் நடைபெற்றது

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்புச் செயலர் ஹர்.சகாய் மீனா தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்புச் செயலர் ஹர்.சகாய் மீனா தலைமையில், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் முன்னிலையில் இன்று (14.10.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்புச் செயலர் தெரிவித்ததாவது: இந்தியாவில் நிதி ஆயோக் (திட்டக்குழு) வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழுவின் ஆலோசனையின் படியும் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை அலுவலர்களால் நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகள்(SDG(Sustainable Development of Goals) 104 மாவட்டக் குறியீடுகள் தொடர்பான தரவுகள் 2015 முதல் 21 துறைகளிடமிருந்து (SDG Server)-ன்படி பெறப்பட்டு, நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டிற்கான இணையதளம் மூலம் (DGGI) பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியினை வட்டார அளவில் (Block Indicator Frame Work) மேற்கொள்வதற்கு ஏதுவாக வட்டார அளவில் ஒருங்கிணைப்புக் குழுவானது வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் அனைத்து வட்டாரங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிங்களிலும் வட்டார அளவில் குறியீடுகள் பெறுவது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசு மாவட்டங்களின் வளர்ச்சியினை கண்டறிய 'மாவட்ட நல்லாட்சி குறியீடுகள்" (District Good Governance Index DGGI)அடிப்படையில் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த உத்தேசித்துள்ளது. அதற்காக 2020-21ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு 75 மாவட்ட நல்லாட்சி குறியீடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெற ஏதுவாக கூட்டம் நடத்தப்பட்டு DGGI-ன் முக்கியத்துவம், தரவுகளின் உண்மைத் தன்மை பற்றி அனைத்து அலுவலர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டு, இதன் மூலம் பெறப்பட்ட தரவுகளை கணினி பதிவு மேற்கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்புச் செயலர் ஹர்.சகாய் மீனா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்கள் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், என்.ஓ.சுகபுத்ரா, ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஆலோசகர் சுஜாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், மாவட்ட திட்டமிடும் அலுவலர் (பொ) இளங்கோ தாயுமானவன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலை அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?