புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று
X

சத்துணவு மைய அமைப்பாளர்களிடம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்குகிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ள 3 சத்துணவு மையங்களின் அமைப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குன்றாண் டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி, புதுக்கோட்டை நகராட்சி தர்மராஜ்பிள்ளை துவக்கப்பள்ளி ஆகிய 3 சத்துணவு மையங்களுக்கு, ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, (21.11.2023) வழங்கினார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தர்மராஜ்பிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளின் சத்துணவு மையங் களுக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட குயெஸ்ட் (Quest Certification)) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை தணிக்கை அலுவலரால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டது.

மேலும் இப்பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள உணவு கூடங்களில் சுடுதண்ணீர் வசதி, உணவு வெப்பமானி, ஜன்னல்களில் பூச்சிகள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள், உணவு பாதுகாப்பு அங்கீகாரம், தொற்றில்லா சான்றிதழ், காய்கறி தோட்டம் உள்ளிட்டவைகளை கடைப் பிடிக்கப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் இந்த 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றுகள் வழங்கப்பட்டது.

மேலும் இதுபோன்று அதிகளவில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பள்ளி சத்துணவு மையங்களாக இம்மாவட்டத்தை மாற்றிட தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சென்னை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன முதன்மை தணிக்கை அலுவலர் ப.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) எம்.ஜெயராமன், மாவட்ட சத்துணவு பிரிவு உதவியாளர் கி.சிவராஜன், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பாண்டிசெல்வி போஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பேபிராணி, நகராட்சி ஆணையர் (பொ) முகமது இப்ராஹிம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவானந்தம் (அரிமளம்), சண்முகாதேவி (குன்றாண்டார்கோவில்), உதவியாளர்கிருஷ்ணமூர்த்தி, உதவிப் பொறியாளர்கலியமுத்து, சத்துணவு அமைப்பாளர், சமையலர்ஃஉதவியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil