வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை அருகே செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடந்த தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்
வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைப ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டையை அடுத்த லேனா விளக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் குமரேசன் வரவேற்றார். பொதுச் செயலாளர் சேது செல்வம், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர்வதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்றல் பணியைத் தவிர மற்ற பணிகளை கொடுக்கக் கூடாது. இதர செயலிகளை இயக்குவதற்கு தனியாக பணியாளர்களை நியமித்திட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம்பெறும் உரிமையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் கல்வியாண்டு முடியும் வரை பணியில் நீட்டிக்க வகை செய்யும் அரசாணையை மீண்டும் தொடர்ந்து அமல்படுத்திட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் தமிழ் உள்ளிட்ட எட்டு பட்டதாரி ஆசிரியர்களை தவறாமல் நியமித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu