புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள்: ஆட்சியர் ஆ.ய்வு

புதுக்கோட்டை  மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள்: ஆட்சியர் ஆ.ய்வு
X

புதுக்கோட்டை மாவட்டம், எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.

Counting and writing project works in Pudukkottai district

புதுக்கோட்டை மாவட்டம், எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை இராஜகோபாலபுரம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 13.06.2022 அன்று எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 2025 -ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பினை நிறைவு செய்யும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களை பொருள் புரிந்து படிக்கவும், அடிப்படை கணக்குகளை செய்யவும் இத்திட்டத்தின்கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள், 3 வட்டார வளமைய பயிற்றுநர்கள், 6 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியும், 298 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான கருத்தாளர்கள் பயிற்சியும், 1,965 இடைநிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகள், அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் கையேடு, மாணவர்களுக்கான அரும்பு, மொட்டு, மலர் குறித்த தமிழ்;, ஆங்கிலம் மற்றும் கணக்கு குறித்த 1,55,410 புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

1ஆம் வகுப்பு அரும்பு கற்றல் நிலையிலும், 2ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு கற்றல் நிலையிலும், 3ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு, மலர் கற்றல் நிலையிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் நிலையினை கண்டறிவதற்காக செயல் திட்டங்கள், வளறறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் பள்ளி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவ, மாணவியர்களின் கற்றல் கற்பித்தல் திறன்கள் ஆரம்ப நிலையிலேயே சிறப்பான நிலையில் அமைந்து, அவர்களின் எதிர்கால கனவுகள் மெய்படும் வகையில் செயல்திட்டங்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, உதவித் திட்ட ஒருங்கிணைப்பாள் சுதந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் செங்குட்டுவன், பிரியா மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!