கொரோனா பரவலால் ஆடி18 பண்டிகைக்கு குறைந்த அளவு பெண்களே வழிபாடு
கொரோனா பரவல் காரணமாக ஆடி18 திருவிழாவை முன்னிட்டு படித்துறைகளில் குறைந்தளவு பெண்கள் வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டையில் ஆடி18 விழாவை முன்னிட்டு கோவில் குளக்கரையில் திருமணமான புதுமண தம்பதியர்கள் மற்றும் பெண்கள் குளக்கரையில் உள்ள படித்துறையில் படையலிட்டு வழிபட்டனர்.
ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் புதுமணத் தம்பதியினர் மற்றும் பெண்கள் காவேரிக்கரை மட்டுமல்லாது கோவில் குளக்கரைகள் ஏரிகள் ஆற்றங்கரைகள் ஆகிய பகுதிகளில் தாலி கயிறு காதோலை, கருகமணி உள்ளிட்டவைகளை வைத்து வழிபட்டு தாலிக்கயிறை பிரித்து புது தாலிக் கயிறு கட்டிக் கொள்வார்கள். கோவில்களுக்குச் சென்று வழிபடுவார்கள்.
இந்நிலையில் இந்தாண்டு கொரோனா பரவலை முன்னிட்டு காவேரி கரை ஆற்றங்கரை குளக்கரை போன்ற முக்கியமான இடங்களில் ஆடி பதினெட்டு விழாவை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவில் பல்லவன் குளக்கரையில் குறைந்த அளவிலான புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் படித்துறையில் படையல் இட்டு வழிபட்டு புது தாலி மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu