ஜூன் 12 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

ஜூன் 12 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
X
மாவட்டத்தில் கடந்த 16.01.2021 அன்று முதல் தொடர்ந்து நடத்தப்படுகின்றது. இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 12.06.2022 அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த 16.01.2021 அன்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 1257216 (97 %) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1178068 (91%) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

15-18 வயதுக்குட்பட்ட 69034 (93%) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 61379 (83%) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 12-14 வயதுக்குட்பட்ட 42876 (90%) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 29673 (63%) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 14475 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க அனைவரும் 100மூ தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகும். 100% தடுப்பூசி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 12.06.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 3100 இடங்களில் நடைபெறவுள்ளது. தகுதியுடைய பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் தடுப்பூசியினை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai solutions for small business