விலையில்லா எரிவாயு சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்

விலையில்லா எரிவாயு சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா எரிவாயு பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா எரிவாயு சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: ஏழை, எளிய பொது மக்களுக்காக எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உஜ்வாலா திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப பெண்களுக்கு முன்வைப்பு தொகை இன்றி, எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு உள்ளிட்டவைகள் விலையின்றி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பொதுமக்கள் அருகிலுள்ள எரிவாயு உருளை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கமிட்டி உறுப்பினர்கள் பொது மக்களிடையே இத்திட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பயனாளிகள் சேர்க்கை விவரம் குறித்து அறிக்கை யினை வாரம்தோறும் சமர்ப்பித்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மாவட்ட பிரதி நிதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!