புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
X

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சென்ட்ரல் ரோட்டரி சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாம்

Blood Camp on behalf of Pudukkottai Central Rotary Club

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக இரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் ஜிஎஸ்எம். சிவாஜி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.மகேஸ்வரி, மாவட்ட மனநல மருத்துவர் டாக்டர் ரெ. கார்த்திக் தெய்வநாயகம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு 27 யூனிட் இரத்தம் சேகரித்தனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!