பேரறிஞர் அண்ணா 115 -வது பிறந்த நாள்: திமுக, அதிமுக, மதிமுகவினர் மரியாதை

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் நிர்வாகிகள்
பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த(செப்.15) நாளை முன்னிட்டு புதுக்கோட்டையிலுள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
திமுக: தெற்கு மாவட்டச்செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி தலைமையில் வடக்கு மாவட்டச்செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, மாநிலங்களவை திமுக எம்பி எம்எம். அப்துல்லா, முன்னாள் எம்எல்ஏ- ராசு. கவிதைப்பித்தன், நிர்வாகிகள் த. சந்திரசேகரன், ஆ. செந்தில், க. மதியழகன், ரெத்தினம், நகர்மன்ற துணைத்தலைவர் எம்.லியாகத்அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுப. சரவணன், என்.கே. அறிவுடைநம்பி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அண்ணா உருவச்சிலைக்கு மரியாதை செய்தனர்.
அதிமுக: மாவட்ட பொருளாளர் வி.சி. ராமையா தலைமையில் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், நகரச்செயலர்(வடக்கு) க. பாஸ்கர், நகரச் செயலர் (தெற்கு) எஸ்.ஏ.எஸ். சேட், மாவட்ட அவைத்தலைவர் வீ.ராமசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயாகணேசன், சுமதிபன்னீர் செல்வம், பாரதிசின்னையா, மங்களாகோயில் செல்வம், டவுன் பேங்க் தலைவர் மாரிமுத்து, என்சிஆர். தமிழரசன், வட்டக்கழக செயலர்கள் ஜீவாசெல்வராஜ், உசிலை செல்வராஜ், பி. கண்ணன், தியாகு, நகர நிர்வாகிகள் சுரேஷ், கலியமூர்த்தி, அன்னலட்சுமி, பேபிராணி, தனம், மகாலட்சுமி, எஸ்.ஏ. அழகிரி, போஸ், கிருஷ்ணகுமார் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மரியாதை செய்தனர். இதையொட்டி பொதுமக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.
மதிமுக: மாவட்டச்செயலர் எஸ்.கே. கலியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதில், அரசியல் ஆலோசகர் காசி சிற்றரசு, மாவட்ட பொருளாளர் ராஜரத்தினம், நகர செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மற்றும் உறுப்பினர் எஸ் கே பழனிச்சாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சந்திரசுவாமி, மாவட்ட பிரதிநிதி பி ஆறுமுகம், செல்வராஜ், கருணாகரன், நகர்மன்ற உறுப்பினர் காசிலிங்கம், வட்டச் செயலாளர் ,வீரப்பன், முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu