பயறு உற்பத்தியை அதிகரிக்க ரூ 17 இலட்சம் மானியம் ஒதுக்கீடு
பைல் படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 இலட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) திரு.மெ.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உளுந்து, துவரை, தட்டப்பயறு, கொள்ளு முதலிய பயறு வகைப் பயிர்கள் 6000 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நடப்பு 2022 – 2023ம் ஆண்டில்இ பயறு வகைப் பயிர்களில் சாகுபடி பரப்பு மற்றும் விளைச்சலை அதிகரிக்க 17 இலட்ச ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க எக்டருக்கு 7500 ரூபாய் மானியம், திருவரங்குளம், கரம்பக்குடி மற்றும் கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கு 60 எக்டருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி மற்றும் குன்றாண்டார்கோவில் வட்டாரங்களில் பயறு தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைக்க 40 எக்டருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உளுந்து பயரில் உயர் விளைச்சல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய ஏதுவாக உயர் விளைச்சல் ரக உளுந்து விதைகள்இ கிலோவுக்கு 50 ரூபாய் மானியத்தில் விநியோகிக்க 2.5 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயறு விதை உற்பத்திக்காக கிலோவிற்கு 25 ரூபாய் ஊக்கத் தொகை உதவி வழங்கப்படுகிறது. இதற்காக 2.125 இலட்ச ரூபாய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயறு பயிர்கள் நுண்சத்துக்கள் குறைபாடின்றி வளர்ந்து விளைச்சல் கொடுத்திட பயறு நுண்சத்து 50 சத மானியம் அல்லது எக்டருக்கு 500 ரூபாய் மானியம் என 114 எக்டருக்கும்இ உயிர் உரங்கள் 50 சத மானியம் அல்லது எக்டருக்கு 300 ரூபாய் மானியம் என 431 எக்டருக்கும், பயிர் பாதுகாப்பு மருந்துகள்இ 50 சத மானியம் அல்லது எக்டருக்கு 500 ரூபாய் மானியம் என 64 எக்டருக்கும், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பண்ணைக் கருவிகளில் ரோட்டவேட்டர் இதர விவசாயிகளுக்கு 40 சத மானியம் அல்லது 34000 ரூபாய் மானியம், ஆதிதிராவிடர், சிறு, குறு மலைவாழ் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சத மானியம் அல்லது 42000 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. பேட்டரி தெளிப்பான்கள், இதர விவசாயிகளுக்கு 40 சத மானியம் அல்லது 3000 ரூபாய் மானியத்திலும், ஆதிதிராவிடர், சிறு, குறு, மலைவாழ் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சத மானியம் அல்லது 3800 ரூபாய் மானியத்திலும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வட்டார அளவில் அந்தந்த வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu