சுதந்திரப் பேராட்ட வீரர் என்.சங்கரய்யா மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் புகழஞ்சலி

சுதந்திரப் பேராட்ட வீரர் என்.சங்கரய்யா மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் புகழஞ்சலி
X

சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரய்யா மறைவுக்கு புதுக்கோட்டையில் அஞ்சலி செலுத்திய அனைத்துக்கட்சியினர்

சுதந்திரப் பேராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் புகழஞ்சலி செலுத்தினர்

சுதந்திரப் பேராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் புகழஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா(102)-வின் மறைவிற்கு புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார்.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை, முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன், திமுக நகரச் செயலாளர் ஆ.செந்தில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் வி.முருகேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் கே.கலியமூர்த்தி,

சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் சிபிஐ(எம்.எல்) மாவட்டச் செயலாளர் மு.வளத்தான், விவசாயிகள் ஐக்கிய முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாதவன், தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஜி.எஸ்.தனபதி உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!