அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்: ஆட்சியர் தகவல்

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர் களையும் ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டத்தில் விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன் பெறலாம்.

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம்(TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர்(VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.

இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதே இந்ததிட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in/www.tnega.tn.gov.in) இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்கும். அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் 14.04.2023 அன்று இரவு 8.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3000/- மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6000/- ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும் . விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பித்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இது நல்ல இருக்கே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கு 8 வருஷம் வாரன்டியா !