/* */

புதுக்கோட்டையில் 7-ஆவது உலகத் திரைப்பட விழா நிறைவு

Film Festival -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத் திரைப்பட விழா நிறைவு பெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில்  7-ஆவது உலகத் திரைப்பட விழா நிறைவு
X

நிறைவு விழாவில் தமுஎக சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

Film Festival -புதுக்கோட்டை வெஸ்ட் திரையங்கத்தில் நடைபெற்று வந்த 7-ஆவது உலகத் திரைப்பட விழா எழுச்சியுடன் நிறைவு பெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத் திரைப்பட விழா அக்.14 முதல் 18 வரை புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கத்தில் நடைபெற்றது. 5 நாட்களும் 11 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நாளும் திரைப்பட இயக்குநர்கள் சசி, பாண்டிராஜ், காளி வெங்கட், வினோத்ராஜ், பிரம்மா, தமிழ், எடிட்டர் லெனின், ஒளிப்பதிவாளர் விக்னேஷ்குமுளை ஆகியோருடன் எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஆர்.நீலா, ஓவியர் ஸ்ரீரசா, திரைக்கலைஞர் கா.பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலைந்துரையாடல் நிழச்சியை நடத்தியது. பார்வையாளர்களுக்கு உலகத் திரைப்படங்கள் குறித்த பார்வையை மேம்படுத்துவதாக அமைந்தது.

நிறைவு விழாவுக்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, ஜீவி, மருத்துவர் ஜெயராமன், கவிஞர் ரமா ராமநாதன் உள்ளிட்டேர் பேசினர். விழாவில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், திரைப்பட விழா என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளில் அல்லது திரையிடும் வசதியுள்ள சிறப்பு அரங்குகளில் குறிப்பிட்ட சில திரைப்படங்களை திரையிட்டு விவாதிப்பது, விளக்குவது, மற்றும் தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவது போன்ற பல நிகழ்வுகள் ஒருங்கே நிகழும் ஒரு கலை விழாவாகும்.

பொதுவாக ஒரு நகரம் அல்லது பிராந்தியத்தில் இவ்விழா நடைபெறுகின்றன. திரைப்பட விழாக்களில் திரைப்படங்கள் பொருத்தமான திறந்த வெளி அரங்கிலும் திரையிடப்படுவதுண்டு. திரையிடப்படும் திரைப்படங்கள் சமீபத்திய தேதிகளில் திரையிடப்பட்டதாக இருக்கலாம். நடத்தப்படும் திரைப்பட விழாவின் நோக்கத்தைப் பொறுத்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்களின் வெளியீடுகளும் விழாக்களில் சேர்க்கப்படுகின்றன. திருவிழாக்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர் அல்லது திரைப்பட வகையை சேர்ந்த படங்களை திரையிடுவதில் கவனம் செலுத்துகின்றன.

இன்று, உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன - சன்டான்ஸ் திரைப்பட விழா மற்றும் சிலாம்டான்ஸ் திரைப்பட விழா, டெர்ரர் திரைப்படவிழா மற்றும் இசையை ரசிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் அமெரிக்க திரைப்பட விழா என்று திரைப்பட விழாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன.உற்பத்தி செலவு கணிசமாகக் குறைக்கப்பட்ட போதும்,, திரைப்படத் தயாரிப்பின் ஒத்துழைப்புக்கு இணைய தொழில்நுட்பம் அனுமதிக்க தொடங்கிய போது எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக திரைப்பட நிதிப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றார் மதுக்கூர் ராமலிங்கம்.

விழாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் திரைப்படங்களை திரையிட்டும், திரை ஆளுமைகளை அழைத்து வந்து விழா எடுத்தும், உலகத் திரைப்படங்கள் குறித்து ஏராளமான கட்டுரை நூல்களை எழுதியும் உலகத் திரைப்பட விழா குறித்து விசாலமான பார்வையை மக்களிடம் கொண்டு சென்றதற்காக புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ கௌரவிக்கப்பட்டார். முன்னதாக மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் வரவேற்றார். பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Oct 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!