தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசளித்து அசத்திய ஊராட்சி மன்ற தலைவர்

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசளித்து அசத்திய ஊராட்சி மன்ற தலைவர்
X

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய வீரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பவல்லி ராஜ்குமார்.

தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அனைவருக்கும் சில்வர் தட்டு பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார்

கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்திக்கொண்ட பொதுமக்களுக்கு வீரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பரிசுப் பொருள்களை வழங்கி உற்சாகப்படுத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை பாதிப்பைத் தடுக்கும் விதமாக சுகாதாரத்துறையினரால் கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரகுடி ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், அந்த ஊராட்சியைச்சேர்ந்த 215 பேர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதையடுத்து,ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜ்குமார், தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அனைவருக்கும் சில்வர் தட்டு பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். முகாமில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!