புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கிய ஆளுமை களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்கலை, இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்கலை, இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
புதுக்கோட்டை புத்தகத திருவிழாவில் கலை, இலக்கிய ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை வழங்கினார்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒன்பதாம்நாள் மாலை நிகழ்ச்சிக்கு ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளர் எம்எபி.ஜெயபால் தலைமை வகித்தார். விழாவில், பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை, இலக்கியத்தில் வாழ்நாள் சாதனை புரிந்த ஆளுமைகளுக்கான விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வழங்கி சிறப்பித்தார்.
இவ்விருதை ஞானாலயா நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் ஜெ.ராஜாமுகமது, தொல்லியல் ஆய்வாளர் கரு.இராசேந்திரன், மூத்த எழுத்தாளர் செம்பை மணவாளன், மூத்த தமிழறிஞர் துரை.மதிவாணன், மூத்த எழுத்தாளர் ப.உமாபதி ஆகியோர் இவ்விருதினைப் பெற்றனர். விருது நிகழ்வை கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்தார்.
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மூத்த வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், சிகரம் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக கவிஞர் ஸ்டாலின் சரவணன் வரவேற்க, ஆ.செல்வராஜ் நன்றி கூறினார். புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் இ.பானுப்பிரியா, கல்வியாளர் ஆர்.சி.உதயகுமார், பிவிஆர்.சேகரன், வி.சுகுமாறன், எம்ஏபி.மணிகண்டன், எம்.சுப்பு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu