பூங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்: 600 கால்நடைகள் பங்கேற்பு

பூங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்: 600 கால்நடைகள் பங்கேற்பு
X

புதுக்கோட்டை பூங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கால்நடைகள் மருத்துவ முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கால்நடைகள் மருத்துவ முகாமில், 600 கால்நடைகள் பங்கேற்றன.

புதுக்கோட்டை அருகே பூங்குடி ஊராட்சியில், கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில், 600க்கும் மேற்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் கொண்டு வந்தனர். கால்நடைகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்ட மற்றும் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளும் போடப்பட்டன.

இந்த முகாமில், பூங்கொடி ஊராட்சி மன்ற தலைவர் அருணா தேவி சிவக்குமார் மற்றும் கால்நடை மருத்துவ துணை இயக்குனர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் பூங்கொடி ஊராட்சியில் உள்ள கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுடைய கால்நடைகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொண்டும் தடுப்பூசிகளை போட்டுச் சென்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!