புதுக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்

புதுக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்
X

புதுக்கோட்டை தஞ்சை சாலையில் விபத்துக்குள்ளான வேன்.

குலதெய்வ கோவில் வழிபட்டிற்காக மயிலாடுதுறையில் இருந்து புதுக்கோட்டை சென்ற வேன் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 3மணி அளவில், மயிலாடுதுறையில் இருந்து புதுக்கோட்டைக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜேசிபி உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்பு வேனை மீட்டனர். இதில் வேனில் பயணம் செய்த ஐந்து நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக்க அனுமதிக்கப்பட்டடுள்ளனர். விபத்து தொடர்பாக ஆதணகோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
ai marketing future