புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகள் இருவருக்கு  கொரோனா தொற்று உறுதி
X

முள்ளங்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வந்த நிலையில், தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளான இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பள்ளியில் பயின்று வரும் மற்ற மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அரசுப் பள்ளியில் பயின்ற 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!