கீரனூர் அருகே மின் கசிவால் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பல்

கீரனூர் அருகே மின் கசிவால் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பல்
X

கீரனூர் அருகே மின் கசிவால் கூரை வீடு எரிந்து சேதம்

கீரனூர் அருகே மின் கசிவால் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பாலனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அடுத்த தெம்மாவூர் ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளி கிருஷ்ணன் மகன் பிச்சை. இவர் இன்று வீட்டில் சமையல் செய்துகண்டிருந்தபோது, கூரை வீட்டின் மேற் புறம் செல்லும் மின் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது.

மளமளவென பரவிய தீ வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதனைக்கண்ட அருகில் இருந்த பொதுமக்கள், தண்ணீரை ஊற்றி தீயை விரைந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வீட்டிலிருந்த பாத்திரங்கள், துணிகள் அனைத்தும் எரிந்து சாம்பாலானது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!