கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த பசு; பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறை

கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த பசு; பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறை
X

கீரனூர் அருகே கழிவுநீர் தொட்டியில் தடுமாறி விழுந்த பசுமாடு.

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை, பல மணி நேர போராட்டத்திற்குப்பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அடுத்த கொளத்தூர் பெருமாள் கோயில் அருகில் பல வருடமாக கழிவுநீர் தொட்டி ஒன்று இருந்து வருகிறது.

இன்று மாலை கழிவுநீர் தொட்டியின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, திடீரென கழிவுநீர் தொட்டிக்குள் நிலைதடுமாறி உள்ளே விழுந்தது.

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாட்டின் சத்தத்தை கேட்டு, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக கீரனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கழிவுநீர் தொட்டியில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!