சாலை மறியல் போராட்டத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கறம்பக்குடி அருகே குரும்பி வயலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத கண்டித்து விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்ததைத்தடுத்த போலீஸார்.
கறம்பக்குடி அருகே குரும்பி வயலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத கண்டித்து விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குறும்பி வயல் பகுதியில் இயங்கி வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாத காரணத்தால் குவியல் குவியலாக குவிந்துள்ள நெல்மணிகள் மழையிலும் வெயிலிலும் கிடந்து முளைத்து நாசமாகின விவசாயிகள வேதனை அடைய செய்தது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிம் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று கூட்டத்தில் அமர்ந்திருந்த விவசாயி சந்தோஷ் செல்லப்பசாமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாலும் அதேபோல நாகமுத்து என்ற விவசாயி விஷத்தைக் குடிக்க முயன்றதாலும் சாலை மறியல் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது, தண்ணீரை ஊற்றி மற்றும் விஷ பாட்டிலை பிடுங்கி எறிந்து இருவரும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர் இதனால் நாளை மறியல் போராட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குறும்பி வயல் பகுதியில் பனையா வயல் 26 ஹெக்டேர், அரங்குளமஞ்சுவயல் 10 ஹெக்டேர், திருமுருகபட்டினம் மஞ்சிகாடு 25 ஹெக்டேர், ஈச்சன்விடுதி 20ஹெக்டேர் மொத்தம் 99 ஹெக்டேர் நெல் சாகுபடிக்கு குரும்பி வயல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வந்தது தற்போது செயல்படாமல் நெல் மணிகள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டு மழையிலும் வெயிலிலும் கிடந்து முளைத்து அழுகி சேதமடைந்தன..
இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் எடுத்துக் கூறி உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால்தான் நாங்கள் ஆத்திரமடைந்து இன்று இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu