புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழா: கடும் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழா: கடும் போக்குவரத்து பாதிப்பு
X

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு   அதிக அளவில் பக்தர்கள் கலந்து   கொண்டதால் கடும் போக்குவரத்து   பாதிப்பு ஏற்பட்டது 

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்தார். இதனால் இன்று மாலை 3 மணி அளவில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், மற்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சாரை சாரையாக கோவிலுக்கு வந்ததால் நார்த்தாமலை அருகே திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலைகளில் பேருந்துகள் கார்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் போக்குவரத்தை சரி செய்வதற்காக காவல்துறை மூலம் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் போக்குவரத்து பாதிப்பால் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business