தமிழக முதல்வர்- வேளாண்துறை அமைச்சருக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கோரிக்கை

தமிழக முதல்வர்- வேளாண்துறை அமைச்சருக்கு  தமிழ்மாநில காங்கிரஸ்  கோரிக்கை
X

தமிழக முதல்வர் மற்றும் வேளாண்துறை அமைச்சர்களுக்கு தமாகா விவசாயஅணி மாநிலத் தலைவர் ரெங்கராஜன் கோரிக்கை

பயிர்சேத நிவாரணம் தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் வேளாண்துறை அமைச்சருக்கு தமாகா விவசாயஅணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாராமாக பருவம் தப்பி பெய்த கன மழையால் டெல்டா மாவட்டங்களில் வாழை உளுந்து போன்ற பயிர்கள் கடுமையாக பாதிக்கபட்டு முழுவதும் சேதமடைந்துவிட்டது.திருச்சி வயலூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் வாழை தாரோடு சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துவிட்டது அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கிள்ளியூரில் அறுவடைக்கு தயாரான உளுந்து பயிர்கள் அனைத்தும் முளைத்து வீணாகிவிட்டது.

எனவே தமிழக முதல்வரும் தமிழக வேளாண்துறை அமைச்சரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு பிர்க்காவில் ஒரு தனிநபர் பாதிப்படைந்தாலும் விவசாயிகளுக்கான இழப்பீட்டை பெற்று தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பாதிப்படைந்த விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய இழப்பீட்டை வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு கணக்கெடுப்பு நடத்தி வழங்கிட வேண்டும் என்று தமாகா விவசாய அணி மாநில தலைவர் துவார்.சி.ரெங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture