50 ஆண்டு ஆலமரத்தை காப்பாற்றிய மாணவர்கள்; தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

50 ஆண்டு ஆலமரத்தை காப்பாற்றிய மாணவர்கள்; தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
X

கறம்பக்குடி அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் சுமார் 460க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஆய்வகம் கட்டுவதற்கு வளாகத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்ட பள்ளி நிர்வாகம் முடிவு எடுத்திருந்தது.

இந்நிலையில், பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மரத்திற்கு அடியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், பள்ளி இடைவேளையின் போது மாணவர்கள் இந்த மர நிழலில்தான் இளைப்பாறி வருகிறோம். உணவு உண்ணுவது முதல் மாலை நேரத்தில் படிக்கவும் இந்த மரத்தடி நிழல் பயன்படுவதால் மரத்தை ஒருபோதும் வெட்டவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

இதன் பின்னர் மாணவர்களிடம் அப்பள்ளி நிர்வாகம், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வருவாய்த்துறையினர் பீஸ் கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை மரத்தை வெட்டமாட்டோம் என்று மாணவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்ததையடுத்து போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!