புதுக்கோட்டை அருகே குடோனில் பதுக்கிய 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கோட்டை அருகே குடோனில் பதுக்கிய 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட 1520 கிலோ ரேஷன் அரிசியுடன் வட்ட வழங்கல் அதிகாரிகள்.

புதுக்கோட்டை அருகே குடோனில் பதுக்கிய 1,520 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு அதிக அளவில் ரேஷன் அரசி களை இலவசமாக வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிக அளவில் அரிசிகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் அரிசியை வாங்குபவர்கள் ஒரு சிலர் அதனை ரேஷன் அரிசியை பதுக்கல்காரர்கள்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி ரேஷன் அரிசி கடத்திய விற்பனை செய்யும் ஒரு சிலர் அதிகளவில் ரேஷன் அரிசியை வாங்கி அதனை தனியார் குடோனில் பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் லாபம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் விதத்தில் தமிழ்நாடு முழுவதும் வட்ட வழங்கல் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தல் அரிசிகளை விற்பனை செய்பவர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் புதுக்கோட்டை பறக்கும் படை தாசில்தார் சோனை கருப்பையா மற்றும் கந்தர்வக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் உத்திராபதி மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளர் வேம்பு ஆகியோர் இன்று அதிகாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசியை கடத்தி ஒருவர் தனது குடோனில் பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும் பேரில் அக்கச்சி பட்டியில் ராமையா மகன் சுகதேவன் என்பவர் தனக்கு சொந்தமான ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் சுமார் 1520 கிலோ ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வரை கைது செய்தும், அவரிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரசிகள் எவ்வாறு வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story