அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்று நடும் விழா

அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்று நடும் விழா
X

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும்  விழாவில் சட்டமன்ற உறுப்பினர்   சின்னத்துரை கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பற்றி சிறப்பித்தார்

அப்துல் கலாம் மற்றும் மறைந்த நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த வீரடிப்பட்டி பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பாகவும் மேலும் மறைந்த சமூக ஆர்வலரும் நடிகருமான விவேக்கின் கனவை நனவாக்கும் நோக்கில் அப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை முதல் முறையாக மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் (எ) ரெத்தினவேல், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அந்தப் பகுதி முழுவதும் நட்டு வைத்தனர். மேலும், இதேபோன்று பல்வேறு பகுதிகளில் அப்துல் கலாம் மற்றும் மறைந்த நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றும் வகையில் எல்லா பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!