/* */

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்

தமிழகம் முழுவதும் 37 முதன்மைக்கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்
X

புதுக்கோட்டை புதிய முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்.

தமிழகம் முழுவதும் 37 முதன்மைக்கல்வி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தார். அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த த.விஜயலட்சுமி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகவும், இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சாமி.சத்தியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக சாமி.சத்தியமூர்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டார் . மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பெ.நடராஜன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம் ( மேல்நிலை)கபிலன் ( உயர்நிலை).

பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி,குருமாரிமுத்து ,செல்வம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் அருண்சுந்தர்ராசன்,மாநிலத் தலைவர் பீட்டர் ராஜா,மாநிலப் பொருளாளர் அன்பரசன் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள், தலைமையாசியர்கள், ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 14 Aug 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’