கீரனூர் அருகில் சாலை விபத்தில் ஒருவருக்கு பலத்த காயம்.

கீரனூர் அருகில் சாலை விபத்தில் ஒருவருக்கு பலத்த காயம்.
X
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கீரனூர் அருகில் களமாவூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவருக்கு பலத்த காயம்.

புதுக்கோட்டை சித்தூர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராசிகுமார்.இவர் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது களமாவூர் மேம்பாலம் அருகில் செல்லும்போது, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த விஜயன் மகன் ஜெகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியதில் ஜெகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவ்விபத்து குறித்து கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரசாக் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு