நல்லதங்கால்பட்டி அருகில் சாலை விபத்து: 5 பேருக்கு பலத்த காயம்
கீரனுர் காவல் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகில் புலியூர் கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் சுப்பிரமணியன் 37. அவரது மனைவி மலர்கொடி இருவரும் புலியூரில் இருந்து கீரனூரிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இவர்கள் நல்லதங்கால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் பொழுது, திருச்சி துவாக்குடி தேனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த விருத்தாச்சலம் மகன் ராஜா 35 என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த சுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் சுப்ரமணியன், மலர்கொடி இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ராஜா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த திருச்சி தேனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த சித்ரா வயது 34 மற்றும் அதே பகுதியை சேர்ந்த சன்னாசி மகன் தங்கையா வயது 60 ஆகிய மூவருக்கும் முகம்,கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 5 பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu